"சென்னையில் பிளாஸ்மா சிகிச்சைக்கான தனிப்பிரிவு சிறப்பு மையம்" – சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்!

சென்னையில் பிளாஸ்மா சிகிச்சைக்கான தனிப்பிரிவு சிறப்பு மையம் திங்கள் கிழமை முதல் செயல்பட உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் சிகிச்சைகள் குறித்து ஆய்வு நடத்திய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஆய்வு நடத்தினார். செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, சட்டமன்ற உறுப்பினர் சண்முகநாதன், மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி மற்றும் மருத்துவர்களுடன் சிகிச்சை குறித்து ஆலோசனை நடத்தியதுடன் கூடுதல் பரிசோதனை மையத்தையும் திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அமைச்சர் விஜயபாஸ்கர், தூத்துக்குடி மாவட்டத்தில் ஆயிரத்து 405 பேர் சிகிச்சை குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும், 52 கர்ப்பிணிகள் நோய்த் தொற்றில் இருந்து விடுபட்டு தாயும் சேயும் நலமாக இருப்பதாகவும் கூறினார். தமிழகம் முழுவதும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ள நிலையில், பிளாஸ்மா தானம் அளிக்க முன்வரவேண்டும் எனவும் அமைச்சர் விஜயபாஸ்கர் கேட்டுக் கொண்டார்.

Exit mobile version