தனியார் பள்ளியில் தமிழக அரசின் இலவச கட்டாய கல்வி சட்டம் 2009 : நலிவடைந்த பிரிவினருக்கு 25 சதவிகித இட ஒதுக்கீடு

தனியார் பள்ளியில் தமிழக அரசின் இலவச கட்டாய கல்வி சட்டம் 2009ன் படி நலிவடைந்த மற்றும் வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவினருக்கு 25 சதவிகித இட ஒதுக்கீடு பொதுமக்கள் மத்தியில் நடைபெற்றது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளியில் நலிவடைந்த மற்றும் வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவினருக்கு, 25 சதவிகித இட ஒதுக்கீடு குறித்த டோக்கன்கள் பொதுமக்கள் மத்தியில் குலுக்கல் முறையில் நடைபெற்றது. இதில் 276 பேர் விண்ணப்பம் அளித்திருந்த நிலையில், தனியார் பள்ளியின் முதல்வர் ரங்கநாதன் குலுக்கல் முறையில் 38 மாணவர்களை தேர்ந்தெடுத்தார். மேலும் 25 மாணவர்கள் காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டனர். பொருளாதாரத்தில் பின் தங்கியவர்கள், துப்புறவு பணியாளர்கள், தீராத நோயால் பாதிக்கப்பட்டவர்கள் உள்ளிட்ட குறிப்பிட்ட பிரிவினருக்கு இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

Exit mobile version