முதல்வரின் அழைப்பை ஏற்று குடிமராமத்து பணிகளில் ஈடுபடும் தனியார் தொண்டு நிறுவனம்

முதல்வரின் அழைப்பை ஏற்ற தனியார் தொண்டு நிறுவனம் கிராமங்களில் குடிமராமத்து பணி செய்ய முன் வந்துள்ளது. நீர் ஆதாரத்தை பெருக்குவதற்காக தனியார் தொண்டு நிறுவனங்கள் மற்றும் தன்னார்வலர்களுக்கு தமிழக முதல்வர் அழைப்பு விடுத்திருத்தார். முதல்வரின் அழைப்பை ஏற்ற ‘நம்பிக்கை விழுதுகள்’ என்ற தொண்டு நிறுவனம் குறிஞ்சிப்பாடியில் குடிமராமத்து பணிகளை செய்ய முன்வந்துள்ளது.

முதல் கட்டமாக குறிஞ்சிப்பாடியடுத்த மருவாய் கிராமத்தில் உள்ள குளத்தை கிராம மக்கள் ஒப்புதலோடு தூர்வாரும் பணியை தொடங்கியுள்ளது. இதற்கு வகை செய்த முதல்வருக்கும், தனியார் தொண்டு நிறுவனத்திற்கும் கிராம மக்கள் நன்றி தெரிவித்தனர்.

Exit mobile version