கொரோனா பரிசோதனை செய்யும் தனியார் ஆய்வகங்கள் கட்டணத்தை குறைக்கவேண்டும் – மத்திய அரசு!

இந்தியாவில் தற்போது மொத்தம் 610 ஆய்வகங்கள், கொரோனா பரிசோதனையை மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளன. நாடு முழுவதும் 432 அரசு ஆய்வகங்களும், 178 தனியார் ஆய்வகங்களும் இந்த பரிசோதனைகளை செய்து வருகின்றன. இந்நிலையில், தனியார் ஆய்வகங்கள் கொரோனா தொற்று இருப்பதை கண்டறியும் பரிசோதனைக்கான கட்டணத்தை குறைக்க வேண்டுமென, இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் கேட்டுக்கொண்டுள்ளது. மேலும், அனைத்து மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் அந்நிறுவனம் அனுப்பியுள்ள கடிதத்தில், தனியார் ஆய்வகங்களிடம் கட்டணக் குறைப்பு தொடர்பாக ஆலோசனை நடத்துமாறு அறிவுறுத்தியுள்ளது. மார்ச் 17ம் தேதி அனுப்பிய கடிதத்தில், ஒரு பரிசோதனைக்கு நான்காயிரத்து ஐநூறு ரூபாய் கட்டணமாக மத்திய அரசு நிர்ணயித்து இருந்தது. தற்போது அந்த கட்டணத்தை குறைத்துக்கொள்ளுமாறு கேட்கப்பட்டுள்ளது. 

Exit mobile version