ராமேஸ்வரத்தில், மளிகை கடையில் விற்பனை செய்த தனியார் குடிநீர் பாட்டிலில் சிலந்திப் பூச்சி இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில், குடிப்பதற்காக விற்பனைக்கு வைத்திருந்த ஒரு லிட்டர் கொள்ளளவு கொண்ட தனியார் நிறுவன குடிநீர் பாட்டிலில், சிலந்திப் பூச்சி கிடந்ததால், வாங்கிச் சென்றவர் அதிர்ச்சியடைந்தார். விக்ரம் என்பவர் தனது குழந்தை தண்ணீர் பருகுவதற்கு கடையில் தண்ணீர் வாங்கி வீட்டிற்கு சென்றபோது, மஞ்சள் நிறத்தில் ஏதோ ஒன்று மிதப்பதைக் கண்டு, அதை உற்று கவனித்த போது, அது சிலந்திப் பூச்சி என்று தெரியவந்ததுள்ளது. இதனால், இது உண்மையான நிறுவனத்திற்கு சொந்தமான குடிநீர் பாட்டிலா, அல்லது போலியாக தயார் செய்யப்பட்ட பாட்டிலா என்பதை, உணவு கட்டுப்பாட்டுத் துறை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.