தனியார் பட்டாசு ஆலை வெடி விபத்து: இருவர் பலி

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில், தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில், இருவர் உடல் சிதறி பலியாகினர்.

சாத்தூரை அடுத்த துலுக்கன் குறிச்சியில் இயங்கி வரும் தனியாருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில், வழக்கம் போல தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக மணி மருந்து என்னும் மூலப்பொருள் வெடித்ததில், இருவர் உடல் சிதறி பலியாகினர். மேலும் பட்டாசு ஆலையின் இரண்டு அறைகள் தரைமட்டமாகின. சம்பவம் குறித்து தகவலறிந்த தீயணைப்புத்துறையினர், உடல்களை மீட்டு, சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வெடிவிபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Exit mobile version