சென்னை உட்பட 4 மாவட்டங்களை தவிர்த்து, பிற பகுதிகளில் இன்று முதல் தனியார் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
நாடு முழுவதும் ஜூன் 30ம் தேதி வரை பொது முடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ள சூழலில், பல்வேறு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. அதன் அடிப்படையில், பல்வேறு மாவட்டங்களில் அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களை தவிர்த்து, பிற பகுதிகளில் இன்று முதல் தனியார் பேருந்துகள் இயக்கப்படும் என, தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. அரசு குறிப்பிட்டுள்ள மண்டலத்துக்கு உட்பட்ட பகுதிகளில், விதிமுறைகளை பின்பற்றி தனியார் பேருந்துகள் இயக்கப்படும் எனவும், பழைய கட்டணமே வசூலிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.