கோவையில், விபத்து வழக்கில் இழப்பீடு வழங்காத தனியார் பேருந்து ஜப்தி செய்யப்பட்டது.
கோவை மதுக்கரை பகுதியைச் சேர்ந்த கீதாஞ்சலி என்பவர், கடந்த 2018ம் ஆண்டு, தனியார் பேருந்து மோதிய விபத்தில் படுகாயம் அடைந்தார். இதுதொடர்பாக இழப்பீடு கோரி, கீதாஞ்சலி தரப்பில் சிறப்பு சார்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், அவருக்கு, பேருந்து நிறுவனம் 74 லட்சத்து 75 ஆயிரம் ரூபாயை இழப்பீடாக வழங்க உத்தரவிடப்பட்டது. ஆனால், இழப்பீடு தொகை வழங்கப்படாததால் பேருந்தை நீதிமன்ற ஊழியர்கள் ஜப்தி செய்தனர்.