’பிருத்வி-2’ஏவுகணை சோதனை வெற்றி

நாட்டின் பாதுகாப்புக்காக உருவாக்கப்பட்டுள்ள ’பிருத்வி-2’ஏவுகணை வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது.

ஒடிசா மாநிலத்திலுள்ள சாண்டிபூர் கடல் பகுதியில் இந்த சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டது. இந்திய ராணுவத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு கழகத்தின் சார்பாக உருவாக்கப்பட்டுள்ள ’பிருத்வி-2’ஏவுகணை கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து சென்று தாக்கும் வல்லமை பெற்றதாகும். நேற்றிரவு 2 முறை சோதனை செய்யப்பட்ட ’பிருத்வி-2’ஏவுகணை 350 கிலோ மீட்டர் தூரம் உள்ள இலக்கை தாக்கும் எனக் கூறப்படுகிறது. மேலும், இந்த ஏவுகணை, அணு ஆயுதங்களை தாங்கி செல்லும் திறன் பெற்றதாகவும் ராணுவ அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Exit mobile version