2ஜி வழக்கில் சிறை சென்றவர்கள் அதிமுகவை விமர்சிக்கத் தகுதியில்லை

2ஜி வழக்கில் சிறை சென்றவர்களுக்கு எல்லாம் அதிமுகவை பற்றி பேச தகுதியில்லை என சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் குற்றம்சாட்டியுள்ளார். விழுப்புரம் மாவட்டம், கூட்டேரிப்பட்டில் ஆரணி நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் ஏழுமலையை அறிமுகம் செய்யும் நிகழ்வு மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடனான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் மற்றும் அதிமுக கூட்டணிக் கட்சி முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

அப்போது பேசிய சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், 2ஜி வழக்கில் சிறை சென்றவர்களுக்கு அதிமுகவை பற்றி பேச தகுதியில்லை என விமர்சித்தார். பேரறிவாளன் உட்பட 7 பேரின் விடுதலையை மறுக்கும், காங்கிரஸ் கட்சியோடு திமுக கூட்டணி வைத்துக்கொண்டு, மக்களை ஏமாற்றி வருகிறது என்று அவர் விமர்சித்தார்.

Exit mobile version