’ஆங்கிலேயர் காலம் முதல் கடைபிடிக்கப்பட்டு வரும் சிறைகள் சட்டம் மாற்றப்படும்’ – மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு!

ஆங்கிலேயர் காலம் முதல் கடைபிடிக்கப்பட்டு வரும் சிறைகள் சட்டம் மாற்றப்பட்டு, அடுத்த 6 மாதங்களுக்குள் புதிய சட்டம் இயற்றப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

குஜராத் மாநிலம் அகமதபாத்தில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், புதிய சட்டம் மூலம் இந்தியாவின் அனைத்து சிறைகளும் அதிநவீன சிறைகளாக மாற்றப்படும் என தெரிவித்தார்.

ஒவ்வொரு மாவட்ட சிறை மற்றும் நீதிமன்றத்தில் வீடியோ கான்பரென்சிங் வசதி செய்ய அனைத்து மாநில அரசுகளுக்கும் கோரிக்கை விடுத்த அவர், புதிய சட்டம் மூலம் சிறைகளுக்குள் நடக்கும் அரசியல் மற்றும் கோஷ்டி மோதல்களுக்கு முடிவு கட்டப்படும் என தெரிவித்தார்.

Exit mobile version