அமெரிக்க பல்கலைக் கழகங்களில் உயர்கல்வி படித்தவர்களுக்கு எச்1பி விசாக்களை பெறுவதில் முன்னுரிமை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் பிற நாடுகளை சேர்ந்தவர்கள் 3 ஆண்டுகள் தங்கியிருந்து வேலை பார்ப்பதற்கு வழங்கப்படுவது எச்1பி விசா ஆகும். ஒவ்வொரு நிதியாண்டிலும் 65 ஆயிரம் எச்1பி விசாக்கள் வழங்கப்படுகின்றன. இதுதவிர அமெரிக்காவில் உயர்கல்வி பயின்று பட்டம் பெற்ற 20 ஆயிரம் பேருக்கு இந்த விசா கூடுதலாக வழங்கப்படுகிறது.
ஆண்டு தோறும் எச்1பி விசாவை 70 சதவிகிதத்திற்கு மேலாக இந்தியர்கள் பெறுகின்றனர். இந்த விசாக்களை பெறுவதற்கான நடைமுறைகளை கடுமையாக்க அதிபர் டிரம்ப் தொடர்ந்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில், அமெரிக்க பல்கலைக் கழகங்களில் உயர்கல்வி படித்தவர்களுக்கு எச்1பி விசாக்களை பெறுவதில் முன்னுரிமை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை ஏப்ரல் 1ம் தேதி முதல் அமலுக்கு வரும் எனத் தெரிகிறது.