இலங்கை அதிபர் தேர்தலுக்கு முன்பாகவே மாகாண சபை தேர்தலை நடத்த கோரிக்கை

இலங்கையில் அதிபர் தேர்தலுக்கு முன்பாகவே ஒத்திவைக்கப்பட்டுள்ள மாகாண சபை தேர்தலை விரைந்து நடத்த வேண்டும் என எதிர்கட்சி தலைவர் மகிந்தா ராஜபக்ச தெரிவித்துள்ளார். மகிந்த ராஜபக்சவின் இளைய மகனான ரோகித்த ராஜபக்சவுக்கு அண்மையில் திருமணம் நடைபெற்றது. சிங்கள முறைப்படியும், கிறிஸ்தவ முறைப்படியும் திருமணம் செய்து கொண்டனர். இதையடுத்து, இந்து முறைபடி நடைபெற்ற திருமண நிகழ்வில் ராஜபக்சவின் நெருங்கிய உறவினர்கள் மட்டும் கலந்துகொண்டனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ராஜபக்ச, கடந்த ஒன்றரை வருடங்களுக்கும் மேலாக ஒத்தி வைக்கப்பட்டிருக்கும் மாகாண சபைகளுக்கான தேர்தலையே அரசு விரைந்து நடத்த வேண்டும், என கூறியுள்ளார். மேலும், அதிபர் தேர்தலுக்கு முன்னதாகவே மாகாண சபைகளுக்கான தேர்தலை விரைந்து நடத்த வேண்டுமெனவும், தேர்தல் ஆணையக் குழு தலைவர் மகிந்த தேசப்பிரியா இதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Exit mobile version