நாடாளுமன்ற தேர்தலையொட்டி சுமார் 4 லட்சம் கோடி விவசாய கடன்கள் தள்ளுபடி – மத்திய அரசு அறிவிப்பு

நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாகவே விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்ய மத்திய அரசு திட்டமிட்டு இருப்பதாகத் தகல்கள் வெளியாகிஉள்ளன. 

நடந்து முடிந்த 5 மாநில தேர்தல் முடிவுகள் பாஜகவுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இந்த முடிவுகள் நாடாளுமன்ற தேர்தலில் எதிரொலிக்கலாம் என கூறப்படும் நிலையில், அதற்கு முன்னதாக விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்ய பாஜக முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன் மூலம் தேர்தல் நேரத்தில் உணவுப் பொருட்களின் விலை குறையும் என்பதால், தேர்தலை எளிதில் எதிர்கொள்ள முடியும் என பாஜக அரசு திட்டமிட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

சுமார் 4 லட்சம் கோடி ரூபாய் விவசாயக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படலாம் என்றும், இதன் மூலம் நாடு முழுவதும் சுமார் 26 கோடி விவசாயிகள் பயனடைவார்கள் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் விவசாயக் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்கிற கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த மாதம் டெல்லியில் விவசாயிகள் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதும் குறிப்பிடத்தக்கது.

 

Exit mobile version