அரச குடும்ப உறுப்பினர் பொறுப்பில் இருந்து இளவரசர் ஹாரி தம்பதி விலகல்

பிரிட்டன் அரச குடும்பத்தின் உறுப்பினர்கள் பொறுப்பில் இருந்து, இளவரசர் ஹாரியும், அவரது மனைவி மேகனும் விலகியதாக பக்கிங்கஹாம் அரண்மனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

பிரிட்டன் அரச குடும்ப பதவியில் இருந்து விலகப் போவதாக, இளவரசர் ஹாரியும், அவரது மனைவி மேகனும் தெரிவித்து இருந்தனர். தங்களுக்கு பரம்பரை சொத்துகள் வேண்டாம் என்றும் அவர்கள் கூறியிருந்தனர். ஹாரி தம்பதியின் இந்த அறிவிப்பு, அரச குடும்பத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக குடும்ப உறுப்பினர்களுடன் இங்கிலாந்து ராணி எலிசபெத் ஆலோசனை நடத்தினார். இந்த நிலையில், பிரிட்டன் அரச குடும்பத்தின் உறுப்பினர்கள் பொறுப்பில் இருந்து இளவரசர் ஹாரியும், அவரது மனைவி மேகனும் விலகியதாக, பக்கிங்கஹாம் அரண்மனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

அரச குடும்பத்தினர் பயன்படுத்தி வரும் HRH எனப்படும் பட்டத்தை, இனி ஹாரியும் அவரது மனைவி மேகனும் பயன்படுத்த மாட்டார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரிட்டன் பொதுமக்களின் வரிப்பணத்தை, இளவரசர் ஹாரியும், அவரது மனைவியும் பயன்படுத்தமாட்டார்கள்.

அவர்கள் தங்கியிருந்த காட்டேஜ்ஜை புதுப்பிக்க பயன்படுத்திய மக்கள் வரிப்பணம் 22 கோடி ரூபாயை திரும்ப கொடுக்கவும் இளவரசர் ஹாரி முடிவு செய்துள்ளார்.

Exit mobile version