பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி பிரேசில் புறப்பட்டார்.
11வது பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி பிரேசில் புறப்பட்டுச் சென்றார். பிரிக்ஸ் அமைப்பில் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கின்றனர். பொருளாதார ஒத்துழைப்பு, வணிகம் ஆகிய துறைகளில் கூட்டாக பங்களிப்பு அளிக்கும் விதமாக இந்த மாநாடு நடைபெறுகிறது. நாளையும், நாளை மறுநாளும் நடைபெறுவதை தொடர்ந்து, பிரதமர் மோடி பிரேசில் புறப்பட்டுச் சென்றார். அங்கு ரஷ்ய அதிபர் புதின், சீன அதிபர் ஷி ஜின்பிங் ஆகியோரை தனித்தனியே பிரதமர் மோடி சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டுள்ளார்.