பிரதமரின் மிஷன் சக்தி பேச்சில் தேர்தல் விதி மீறலா?

பிரதமர் மோடியின் மிஷன் சக்தி பேச்சில், தேர்தல் விதி மீறல் உள்ளதா? இல்லையா? என்பதை தேர்தல் ஆணையம் இன்று முடிவு செய்யும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. விண்வெளியில் 300 கிலோ மீட்டர் உயரத்தில் சுற்றி வந்த செயற்கைகோளை சுட்டு வீழ்த்திய ‘மிஷன் சக்தி’ திட்டம் மூலம் இந்தியா சாதனை நிகழ்த்தியதாக பிரதமர் மோடி நாட்டிற்கு அறிவித்தார். பிரதமர் மோடியின் இந்த அறிவிப்பு தேர்தல் விதிமுறைகளை மீறிய செயல் என்றும் அவர் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இடதுசாரிகள் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின.

பிரதமரின் அறிவிப்பு தேர்தல் விதி மீறலா? என்பது பற்றிய ஆய்வு செய்ய விசாரணை குழுவை தேர்தல் ஆணையம் அமைத்து உத்தரவிட்டது. இந்த குழு பிரதமரின் பேச்சில் தேர்தல் விதி மீறல் உள்ளதா? இல்லையா? என்பதை இன்று முடிவு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Exit mobile version