அந்தமான், நிக்கோபாரில் வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைக்கும் பிரதமர்

இரண்டு நாள் பயணமாக அந்தமான், நிக்கோபார் தீவுகளுக்கு சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, பல்வேறு வளர்ச்சி திட்டங்களை இன்று தொடங்கி வைக்கவுள்ளார். கார் நிகோபாரில் உள்ள சுனாமி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தும் மோடி, அதைத் தொடர்ந்து அந்தமானில் நிறைவடைந்த திட்டங்களை தொடங்கி வைத்தும், பல்வேறு புதிய திட்டங்களுக்கு அடிக்கல்லும் நாட்டுகிறார்.

அதன் பின்னர், செல்லுலார் சிறைக்கு சென்று பார்வையிட உள்ள பிரதமர், அந்தமான் தலைநகர் போர்ட் பிளேரில், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தேசியக் கொடியை ஏற்றியதன், 75வது ஆண்டை முன்னிட்டு, நாளை நடைபெறவுள்ள நிகழ்ச்சியில் பங்கேற்று 150 மீட்டர் உயர கம்பத்தில் தேசியக்கொடி ஏற்றி வைக்கிறார்.

நேதாஜியின் நினைவாக தபால் தலையையும், நாணயத்தையும் அவர் வெளியிடுகிறார். இதனை தொடர்ந்து பொதுக்கூட்டம் ஒன்றிலும் பிரதமர் மோடி பங்கேற்று பேசவுள்ளார்.

பின்னர், மத்திய உள்துறை அமைச்சகம் முடிவு செய்துள்ள படி, ராஸ் தீவுக்கு நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தீவு என்றும், நீல் தீவுக்கு ஷகீத் தீப் தீவு மற்றும் ஹேவ்லாக் தீவுக்கு ஸ்வராஜ் தீவ் என்று புதிய பெயரை மோடி சூட்டவுள்ளார்.

Exit mobile version