இலங்கையில் வடக்கு பகுதிக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க 3 நாள் பயணம் மேற்கொண்டுள்ளார்.
இலங்கையில் வடக்கு பகுதியான யாழ்ப்பாணத்திற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அமைச்சர்கள் குழுவினர் சென்றுள்ளனர். யாழ்ப்பாண மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய மேம்பாட்டு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர். இதில் அமைச்சர்கள், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அதிகாரிகள் எனப் பலரும் கலந்து கொண்டுள்ளனர். அப்போது 60 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட, அரசு மருத்துவமனையில் விபத்து மற்றும் அவரச சிகிச்சை பிரிவுக்கானன் கட்டடத்தை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க திறந்து வைத்தார்.