வருடாந்திர உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜப்பான் சென்றடைந்த பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்தியா, ஜப்பான் நாடுகளுக்கு இடையேயான உச்சி மாநாடு ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இரண்டு நாட்கள் நடக்கவுள்ளது. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக டெல்லி விமான நிலையத்தில் இருந்து தனி விமானம் மூலம் ஜப்பான் சென்றடைந்த பிரதமர் மோடிக்கு டோக்கியோ நகரில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
13-வது முறையாக நடைபெற்று வரும் இந்த மாநாட்டில், பிரதமர் மோடி 5-வது முறையாக கலந்து கொள்ள உள்ளார். இந்த மாநாட்டின் போது ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேவை சந்திக்க உள்ளார். இந்த சந்திப்பின் போது, இரு நாட்டு உறவு, மற்றும் சர்வதேச பிரச்சனைகள் குறித்து விவாதிக்க உள்ளதாக இந்திய வெளியுறவுத்துறை கூறியுள்ளது. இந்தியாவில் தொழில் தொடங்க ஜப்பான் தொழிலதிபர்களுக்கு மோடி அழைப்பு விடுக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.