அந்தமான் நிகோபார் தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் பிரதமர் மோடி, அங்குள்ள சுனாமி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்.
1943ஆம் ஆண்டு டிசம்பர் 30ஆம் தேதி அந்தமான் நிகோபார் தீவுகளின் தலைநகரான போர்ட் பிளேரில் நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் முதன்முறையாக தேசிய கொடியை ஏற்றிவைத்து இந்திய சுதந்திரத்தை பிரகடனப்படுத்தினார். இதன் 75ஆம் ஆண்டு நிறைவை கோகாலமாக கொண்டாட மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக பிரதமர் மோடி அந்தமான் நிகோபார் தீவுகளுக்கு சென்றுள்ளார். கொண்டாட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்கு முன்னதாக, இன்று காலை கார் நிகோபாரில் அமைக்கப்பட்டிருக்கும் சுனாமி நினைவு இடத்தில் பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தினார்.