எதிர்க்கட்சிகள் பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசுவதாக பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலம் அம்ரோஹாவில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, தனக்கு ஜாயித் விருது வழங்கிய ஐக்கிய அரபு எமீரேட்சுக்கும், அந்நாட்டு மக்களுக்கும் நன்றி தெரிவித்து கொள்வதாக குறிப்பிட்டார். பயங்கரவாதிகளுக்கு அவர்களுக்கே புரியும் மொழியில் இந்திய ராணுவம் பதிலடி கொடுத்தது. இதனை இங்கிருக்கு எதிர்க்கட்சிகள் விமர்சித்தன. மேலும் பாகிஸ்தானுக்கு ஆதரவாகவும் அவர்கள் பேசி வருவதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார். தேசிய பாதுகாப்பிற்கு எதிர்க்கட்சிகள் அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாகவும், நாட்டை பிரிக்க முயற்சி செய்வதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.