காங்கிரஸ் மீது பிரதமர் நரேந்திர மோடி குற்றச்சாட்டு

இலங்கையில் நிகழ்த்தப்பட்ட கொடூர குண்டு வெடிப்புகள் போன்று, காங்கிரஸ் ஆட்சியில் இந்தியாவிலும் குண்டுவெடிப்புகள் நிகழ்த்தப்பட்டதாக பிரதமர் நரேந்திர மோடி குற்றம்சாட்டியுள்ளார்.

ஜார்கண்ட் மாநிலம் கும்ளியில் நடைபெற்ற பிரசாரக்கூட்டத்தில் பேசிய அவர், ஆரம்பத்தில் மோடியை குறை சொன்ன எதிர்க்கட்சிகள் தற்போது வாக்குப்பதிவு இயந்திரங்களை குற்றம் சொல்ல ஆரம்பித்துவிட்டதாக கூறினார். பள்ளி சிறுவர்கள் தேர்வில் தோல்வி அடைந்துவிட்டால், பேனாவையும் பேப்பரையும் குறை சொல்வதுபோல், எதிர்க்கட்சிகள் நடந்துக்கொள்வதாக விமர்சித்த பிரதமர் நரேந்திர மோடி, 3ஆம் கட்ட வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில் வேறுவழியின்றி எதிர்க்கட்சிகள் தோல்வியை ஒப்புக்கொண்டுவிட்டதாக தெரிவித்தார். இதனிடையே தற்போது இலங்கையில் நிகழ்ந்திருக்கும் வெடிகுண்டு தாக்குதல்களை போன்றும் 2014ஆம் ஆண்டுக்கு முன்பு காங்கிரஸ் ஆட்சியில் இந்தியாவிலும் தீவிரவாத தாக்குதல்கள் நிகழ்த்தப்பட்டதாகவும், அப்போது தீவிரவாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க காங்கிரஸ் தயங்கியதாகவும் பிரதமர் நரேந்திர மோடி குற்றம்சாட்டினார்.

Exit mobile version