நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ளவது குறித்து தமிழக பாஜகவினருடன் பிரதமர் மோடி நாளை வீடியோ கான்ப்ரன்சிங் மூலம் ஆலோசனை நடத்த உள்ளார்.
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் வெற்றி பெற பாஜக சில மாதங்களுக்கு முன்பே வேலையை தொடங்கி விட்டது. அதன் அடிப்படையில், பிரதமர் மோடியே வீடியோ கான்பரன்சிங் மூலம் பாஜக பூத் கமிட்டி ஊழியர்களுக்கு அறிவுரை வழங்கி உற்சாகப்படுத்தி வருகிறார்.
இந்நிலையில், தமிழக பாஜக தொண்டர்களுடன் வீடியோ கான்பரன்ஸ் மூலம் அவர் நாளை பேச உள்ளார். இதற்காக சேலம், கோவை, நாமக்கல், கன்னியாகுமரி, நீலகிரி ஆகிய 5 தொகுதிளில் இருந்து பூத் கமிட்டி அளவிலான தொண்டர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களுடன் பிரதமர் மோடி வீடியோ கான்பரன்ஸ் மூலம் தேர்தல் வெற்றி வியூகங்கள் குறித்து கலந்துரையாட உள்ளார்.