சீன அதிபர் ஜி ஜிங்பிங்கை பிரதமர் நரேந்திர மோடி விரைவில் சந்திப்பார்!

இந்த ஆண்டு இறுதியில் சீன அதிபர் ஜி ஜிங்பிங்கை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து பேச இருப்பதாக இந்தியாவுக்கான சீன தூதர் மா லான்யு தெரிவித்துள்ளார்.

அண்டை நாடுகளுடன் நட்புறவை வலுப்படுத்தும் நோக்கில் பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இந்தநிலையில் கொல்கத்தாவில் செய்தியாளர்களிடம் பேசிய இந்தியாவுக்கான சீன தூதர் மா லான்யு, இந்த ஆண்டில் சீன அதிபரும் இந்திய பிரதமரும் பலமுறை சந்தித்து பேசியிருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக கூறினார்.

இந்தியாவும் சீனாவும் உலக அரங்கில் மாற்றத்தை ஏற்படுத்தும் எனக் கூறிய அவர், இந்த ஆண்டு இறுதியில் சீன அதிபர் ஜி ஜிங்பிங்கை பிரதமர் மோடி சந்தித்து பேச இருப்பதாக தெரிவித்தார்.

இந்த சந்திப்பின் போது கலாச்சாரம், கல்வி உள்ளிட்ட துறைகளின் மேம்பாடு குறித்து இருநாட்டு தலைவர்களும் ஆலோசிப்பார்கள் எனவும், மா லான்யு தெரிவித்துள்ளார்.

கடந்த ஏப்ரல் மாதம் சீனாவுக்கு சென்ற பிரதமர் மோடி, அந்நாட்டின் அதிபர் ஜி ஜிங்பிங்கை சந்தித்து அதிகாரப்பூர்வமற்ற முறையில் பேச்சுவார்த்தை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version