பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம்

உயர்கல்விக்கு பிந்தைய உதவித்தொகையில் மத்திய அரசு 60 சதவீத பங்களிப்பை உடனே வழங்க வேண்டும் என்று பிரதமருக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி எழுதியுள்ள கடிதத்தில், நடப்பாண்டில் உயர்கல்விக்கு பிந்தைய உதவித் தொகை திட்டத்திற்கான தமிழக அரசின் நடப்பாண்டு செலவு 2 ஆயிரத்து 110 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த திட்டத்திற்கு மத்திய அரசிடம் இருந்து 548 கோடி ரூபாய் மட்டும் தரவேண்டியதாக இருப்பதாகக் குறிப்பிட்டுள்ள முதலமைச்சர், கல்வி உதவித் தொகை திட்டத்தில் அதிக செலவு காரணமாக தமிழக அரசுக்கு கூடுதல் சுமை ஏற்பட்டுள்ளதை சுட்டிக்காட்டியுள்ளார். இதனை கருத்தில் கொண்டு திட்டச்செலவை 60:40 விகிதாச்சாரத்தில் நடைமுறைப்படுத்த மத்திய சமூக நீதித்துறைக்கு பிரதமர் உத்தரவிட வேண்டும் என்றும், கல்வி உதவித்தொகையில் மத்திய அரசின் 60 சதவீத பங்களிப்பை உடனே வழங்க வேண்டும் என்றும் முதலமைச்சர் வலியுறுத்தியுறுத்தியுள்ளார்.

Exit mobile version