அமைச்சரவை கூட்டத்தில் 1 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு… ஏன் தெரியுமா??

இந்தியாவில் கொரோனா தடுப்பு பணிகளுக்காக 23ஆயிரம் கோடி ரூபாயும், வேளாண் உள்கட்டமைப்புகளை மேம்படுத்த ஒரு லட்சம் கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

மத்திய அமைச்சரவை மாற்றி அமைக்கப்பட்டதைத் தொடர்ந்து பிரதமர் மோடி தலைமையில் அமைச்சரவை கூட்டம் டெல்லியில் காணொளிக்காட்சி வாயிலாக நடைபெற்றது.

கூட்டத்திற்குப் பின்னர் மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திரசிங் தோமர், சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய வேளாண் துறை அமைச்சர், தேங்காய் வாரியத்தில் வெளிப்படைத் தன்மையை கொண்டுவர தேங்காய் வாரிய சட்டத்தில் திருத்தம் செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிவித்தார்.

கள நிலவரத்தை அறியும் விதமாக விவசாய சமூகத்தைச் சேர்ந்தவர் வாரியத் தலைவராக இருப்பார் என்று கூறியவர், வேளாண் மண்டிகளை மேம்படுத்த ஒரு லட்சம் கோடி ரூபாய் ஒதுக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாகவும் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய மத்திய சுகாதாரத்துறை அமைச்சர், சுகாதார கட்டமைப்பை வலுப்படுத்த அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா தடுப்பு பணிகளுக்காக 23ஆயிரத்து 123 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.

நாட்டில் 736 மாவட்டங்களில் குழந்தைகள் பிரிவில் 20ஆயிரம் ஐசியூ படுக்கை, ஆக்சிஜன் வசதி, மருந்துகள் வாங்க நிதி ஒதுக்கியுள்ளதாகவும் அவர் கூறினார்.

மேற்கண்ட செய்தியை காட்சிப்பதிவுகளுடன் காண..

⬇⬇⬇

Exit mobile version