ஒருநாள் பயணமாக பிரதமர் மோடி இன்று கேரளா பயணம்

இன்று கேரளா செல்லும்  கொல்லம் புறவழிச் சாலை திட்டத்தை பிரதமர் மோடி துவக்கி வைக்கிறார்.

ஒருநாள் பயணமாக இன்று கேரளா செல்லும் அவர், திருவனந்தபுரத்தை பிற பகுதிகளுடன் இணைக்கும் கொல்லம் புறவழிச் சாலையை அர்ப்பணிக்கிறார். 13 கிலோ மீட்டர் நீளமுள்ள இந்த சாலை, மத்திய மற்றும் மாநில அரசின் நிதி மூலம் கட்டப்பட்டதாகும். கேரள முதல்வர் பினராயி விஜயன் உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர். ஆலப்புழா , மாவல்லிகாரா பகுதிகளில் நடக்க உள்ள பொதுக் கூட்டங்களில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசவுள்ளார்.

 

 

Exit mobile version