வரும் 15ம் தேதி கேரளா செல்லவுள்ள பிரதமர் மோடி, அங்குள்ள பத்மநாபசுவாமி கோவிலில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.
பிரதமர் நரேந்திரமோடி வருகிற 15-ம் தேதி கேரளா செல்கிறார். திருவனந்தபுரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீபத்மநாபசுவாமி கோவிலில் மத்திய சுற்றுலாத்துறை அமைச்சகத்தின் சுவடேஷ் தர்ஷன் திட்டத்தின் கீழ் 78 கோடியே 88 லட்சம் ரூபாய் செலவில் செயல்படுத்தப்பட்டுள்ள பல்வேறு வளர்ச்சிப்பணிகளை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். நிகழ்ச்சியில் கேரள ஆளுநர் பி.சதாசிவம், முதலமைச்சர் பினராயி விஜயன் உள்பட பலர் கலந்து கொள்கிறார்கள். இதை தொடர்ந்து, 27ம் தேதி மீண்டும் கேரளா செல்லும் மோடி, திருச்சூரில் நடைபெறும் கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.