கொரோனா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த மாநிலங்களுடன் ஆலோசித்து அவசர கால திட்டத்தை வகுக்க மத்திய சுகாதார அமைச்சகத்துக்கு, பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டுள்ளார்.
நாட்டில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3 லட்சத்தை தாண்டியுள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி மூத்த அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் ஒவ்வொரு மாநிலங்களிலும் ஏற்பட்டுள்ள பாதிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. பெருநகரங்களில் மருத்துவமனைகளில் உள்ள படுக்கைகள், சிகிச்சை முறைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. மருத்துவமனைகளுக்கு தேவைப்படும் படுக்கைகள், பிற வசதிகள் குறித்து சிறப்புக்குழுவின் பரிந்துரைகளை பிரதமர் கேட்டறிந்தார். இதனை தொடர்ந்து, கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் வகையில், மாநில அரசுகளுடன் விரைந்து ஆலோசித்து அவசர கால திட்டத்தை வகுக்க, சுகாதார அமைச்சகத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டார்.