உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் போட்டியிடவுள்ள பிரதமர் மோடி வரும் 26ம் தேதி வேட்பு மனுத் தாக்கல் செய்யவுள்ளார்.
மக்களவை தேர்தலில் வாரணாசி தொகுதியில் பிரதமர் நரேந்திர மோடி போட்டியிடுகிறார். இந்த தொகுதியில் இறுதிக்கட்டமாக மே 19ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான வேட்பு மனுத்தாக்கல் 22ம் தேதி துவங்குகிறது.
இந்நிலையில் 26-ந் தேதி பிரதமர் மோடி தனது வேட்பு மனுத் தாக்கல் செய்ய உள்ளார். இதையொட்டி 25-ந் தேதி வாரணாசி செல்லும் பிரதமர் மோடி, சாலை வழியாக மக்களை சந்தித்து பிரசாரம் செய்யவுள்ளார். முன்னதாக காசி விஸ்வநாதர் கோவிலில் தரிசனம் மேற்கொள்ளும் அவர், பின்னர் வேட்பு மனுவை தாக்கல் செய்கிறார்.
வேட்பு மனுத் தாக்கலின் போது பாஜக தலைவர் அமித்ஷா, மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அருண் ஜெட்லி, சுஷ்மா சுவராஜ், நிதின் கட்கரி மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் உடன் செல்கின்றனர்.