மாலத்தீவு புதிய அதிபர் இப்ராஹிம் முகமது சோலியின் பதவி ஏற்பு விழாவில், பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.
மாலத்தீவில் நிலவிய அரசியல் குழப்பங்களை முடிவுக்கு கொண்டு வருவதில் இந்தியா ஆர்வம் காட்டியது. அதன் இறையாண்மைக்கு மதிப்பளித்து தேர்தல் நடத்தப்பட வேண்டும் எனவும் இந்தியா விருப்பம் தெரிவித்தது.
இதனிடையே சமீபத்தில் நடைபெற்ற மாலத்தீவு அதிபர் தேர்தலில் அதிபர் அப்துல்லா யாமீனை எதிர்த்து போட்டியிட்ட இப்ராகிம் முகம்மது சோலிஹ் வெற்றிபெற்றார். இதனையடுத்து தனது பதவியேற்பு விழாவில் இந்திய பிரதமர் பங்கேற்ற வேண்டும் என அவர் அழைப்பு விடுத்தார்.
இதனை ஏற்று மாலத்தீவுக்கு சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் மாலத்தீவின் தேசிய மைதானத்தில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் பங்கேற்று புதிய அதிபர் இப்ராகிம் முகம்மது சோலிஹை வாழ்த்தினார்.