அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து

டெல்லி பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று 3 ஆவது முறையாக முதலமைச்சராக உள்ள அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு பிரதமர் நரேந்திர மோடி தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி தனது டுவிட்டர் பதிவில், டெல்லி பேரவைத்தேர்தலில் அமோக வெற்றி பெற்ற ஆம் ஆத்மி கட்சி மற்றும் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு பாராட்டுகள் என்றும் டெல்லி மக்களின் ஆசைகளை நிறைவேற்ற வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு டுவிட்டரில் பதில் அளித்துள்ள அரவிந்த் கெஜ்ரிவால், வாழ்த்துகளுக்கு நன்றி எனவும், டெல்லியை உலக தரம் வாய்ந்த நகரமாக மாற்ற மத்திய அரசுடன் இணைந்து பணியாற்ற ஆர்வத்துடன் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இதேபோல் டெல்லி தேர்தலில் அமோக வெற்றி பெற்ற அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும் டுவிட்டர் வாயிலாக தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

Exit mobile version