கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, பிரதமர் நரேந்திர மோடியின் வங்கதேச சுற்றுப்பயணம் ரத்து செய்யப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
வங்கதேசத்தின் முன்னாள் அதிபர் ஷேக் முஜ்பூர் ரஹ்மானின் நூற்றாண்டு விழாவில் பங்கேற்பதற்காக, பிரதமர் மோடி வரும் 17ம் தேதி டாக்கா செல்ல திட்டமிடப்பட்டது. ஆனால் வங்கதேசத்தில் 3 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், பாதுகாப்பு கருதி பிரதமரின் சுற்றுப்பயணம் ரத்து செய்யப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஷேக் முஜ்பூர் ரஹ்மானின் நூற்றாண்டு விழாவை ஒத்திவைக்க வங்கதேச அரசும் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, பிரதமர் மோடி தனது பிரஸ்ஸெல்ஸ் சுற்றுப் பயணத்தை ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது.