அர்ஜென்டினாவில் இன்று துவங்கவுள்ள ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி அந்நாட்டிற்கு சென்றுள்ளார். இந்த பயணத்தின்போது அமெரிக்கா மற்றும் ஜப்பானுடன் தலைவர்களுடன் அவர் பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
ஜி20 உச்சி மாநாடு அர்ஜென்டினா தலைநகர் பியூனஸ் அயர்சில் இன்று துவங்குகிறது. இருதினங்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி அர்ஜென்டீனா சென்றுள்ளார்.
ஐ.நா. பொது செயலாளர் அன்டானியோ கட்டர்ஸ், சவுதி அரேபிய இளவரசர் முகமது பின் சல்மான் ஆகியோரை அவர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
இந்நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே ஆகியோருடன் அவர் இன்று பேச்சுவார்த்தை நடத்துகிறார். அமெரிக்கா மற்றும் ஜப்பானுடன் இந்தியா முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்துவது இதுவே முதல் முறையாகும்.
ஜெர்மனி, பிரான்ஸ், அர்ஜென்டினா, சிலி, ஸ்பெயின், நெதர்லாந்து ஆகிய நாட்டின் தலைவர்களை பிரதமர் மோடி சந்தித்து பேசுகிறார்.