பிரதமர் மோடி சுற்றுப்பயணமாக மாலத்தீவுக்கு இன்று பயணம்

2வது முறையாக பிரதமராக பதவியேற்ற நரேந்திர மோடி, முதல் வெளிநாட்டு சுற்றுப்பயணமாக மாலத்தீவுக்கு இன்று செல்கிறார்.

மாலத்தீவுக்கு பிரதமர் மோடி, 2வது முறையாக செல்கிறார். பிரதமராக பதவியேற்றபின், தனது முதல் அலுவல் ரீதியான சுற்றுப்பயணத்தை இன்று அவர் மேற்கொள்கிறார். இரு தரப்பு நாடுகளின் உறவுகள், பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து மாலத்தீவு அதிபர் இப்ராஹிம் ஷோலியுடன் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார். பின்னர், மாலத்தீவு நாடாளுமன்றத்தில் இருதரப்பு நாடுகளுக்கு இடையிலான உறவுமுறைகள் குறித்து பிரதமர் மோடி உரையாற்றுகிறார். பின்னர், அந்நாட்டின் துணை அதிபர் ஃபைசல் நசீம், நாடாளுமன்ற சபாநாயகர் முகமது நசீத் ஆகியோரையும் மோடி சந்தித்து பேசயிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மாலத்தீவு பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி நாளை இலங்கை செல்கிறார். அங்கு, தீவிரவாத ஒழிப்பு குறித்து அந்நாட்டின் அதிபர் சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே ஆகியோருடன் மோடி பேச்சுவார்த்தை நடத்துகிறார். இலங்கை பயணத்தையொட்டி, 2 நாடுகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Exit mobile version