சோனியா தொகுதியான ரேபரேலியில் உள்ள ரயில் பெட்டி தொழிற்சாலை -பிரதமர் மோடி பார்வை

உத்தரபிரதேசம் மாநிலம் ரேபரேலியில் உள்ள ரயில் பெட்டி தொழிற்சாலையை, பிரதமர் மோடி இன்று பார்வையிட்டார்.

உத்தரபிரதேசம் மாநிலம் ரேபரேலியில் நவீன முறையில் ரயில் பெட்டி தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையை பிரதமர் மோடி இன்று பார்வையிட்டார். பேட்டரி கார் மூலம், தொழிற்சாலையின் பல்வேறு பகுதிகளை பார்வையிட்டு, ரயில் பெட்டிகளை தயாரிப்பது குறித்து கேட்டறிந்தார். 1100 கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டுகிறார்.

அதன் பின்னர் பிரயாக்ராஜ் பகுதிக்கு செல்லும் பிரதமர் மோடி, அடுத்து ஆண்டு தொடக்கத்தில் நடைபெறவுள்ள கும்பமேளாவுக்கான ஏற்பாடுகள் குறித்து கேட்டு அறிகிறார்.

சோனியா காந்தியின் தொகுதியான ரேபரேலியின் வளர்ச்சியை மத்திய அரசு தடுப்பதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டி வரும் நிலையில், பிரதமர் மோடி அங்கு சென்று புதிய திட்டங்களை துவக்கி வைப்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version