உத்திரகாண்ட் மாநிலம் பத்திரிநாத்தில் உள்ள விஷ்ணு கோயிலில் பிரதமர் நரேந்திர மோடி சுவாமி தரிசனம் செய்தார்.
தேர்தல் பிரசாரம் முடிந்த மறுநாள் பிரதமர் நரேந்திர மோடி இமயமலையை ஒட்டியுள்ள புகழ்பெற்ற கோயில்களில் சாமி தரிசனம் செய்து வருகிறார். உத்திரகாண்ட் மாநிலம் பத்ரிநாத்தில் உள்ள விஷ்ணு ஆலயத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி சென்றார். பிரதமர் வருவதையொட்டி கோயிலில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.கோயிலுக்குள் சென்ற பிரதமர் மோடி அங்கு சிறிது நேரம் சாமி தரிசனம் செய்தார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டுச்சென்றார்
Discussion about this post