அனிமேஷனில் யோகா செய்யும் பிரதமர் மோடி

கடந்த 2015ம் ஆண்டு முதல் சர்வதேச யோகா தினம் ஆண்டுதோறும் ஜூன் 21ம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. மத்திய அரசும் யோகாவை முன்னெடுத்து செல்ல பல்வேறு திட்டங்களை வகுத்து வருகிறது. இந்நிலையில் இன்று காலை பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் யோகா செய்யும் அனிமேஷன் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் மோடியை யோகா செய்யும் மனிதனாக அனிமேஷனில் வடிவமைத்துள்ளனர்.

அந்த வீடியோ பிரதமர் மோடி தடாசனா, திரிகோசனா போன்றவைகள் செய்வது போல உருவாக்கப்பட்டுள்ளது.மேலும் அந்த வீடியோவோடு தடாசனா செய்தால் மற்ற ஆசனங்களை எளிதாக செய்ய இயலும் என்பதையும் மேற்கொள்காட்டியுள்ளார்.

Exit mobile version