அமெரிக்க அதிபர் டிரம்பை வரவேற்றார் பிரதமர் மோடி

அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்தடைந்த அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பை, அகமதாபாத் விமான நிலையத்தில் பிரதமர் நரேந்திர மோடி வரவேற்றார்.

இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இந்தியா வந்தடைந்தார். அகமதாபாத் விமான நிலையத்துக்கு தனி விமானத்தில் வந்தடைந்த டிரம்புக்கு சிவப்பு கம்பள வரவேற்பு மற்றும் முப்படை அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. மேலும் பாரம்பரிய கலைநிகழ்ச்சிகள் மூலம், விமான நிலையத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது. டிரம்புடன் அவரது மனைவி மெலானியா, மகள் இவாங்கா மற்றும் உயர்மட்டக்குழுவினரும் வந்துள்ளனர்.

Exit mobile version