ஜி 20 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக அர்ஜெண்டினா செல்லும் பிரதமர் மோடி, தீவிரவாதிகளுக்கு சட்டவிரோதப் பணப்பரிமாற்றத்தை தடுப்பது குறித்து பேசவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜி 20 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் அவர், கச்சா எண்ணெய் விலையேற்றத்தால் சர்வதேச அளவில் ஏற்படும் பிரச்சனைகள், உலக வர்த்தக அமைப்பான டபிள்யூ.டி.ஓ. வலுப்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்தும் மோடி பேசவுள்ளார். இந்தியாவில் செயல்படுத்திவரும் திட்டங்கள் குறித்தும் மாநாட்டில் பேசவுள்ளதாகவும், அங்கு வரும் சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்திக்கும் அவர், எல்லைப் பிரச்சனை குறித்தும் பேசவுள்ளதும் பயணத்திட்டத்தில் உள்ளது.
சீன அதிபரை 7-வது முறை சந்திக்கவுள்ளதும், பல்வேறு நாடுகளின் தலைவர்களையும் அவர் சந்திக்கிறார். ஜி 20 உச்சி மாநாட்டை முடித்துக்கொண்டு டிசம்பர் 2-ம் தேதி தாயகம் திரும்புகிறார்.