பிரதமர் மோடி 3 நாடுகளுக்கு சுற்று பயணம்

இரண்டு நாள் சுற்று பயணமாக, பிரதமர் மோடி இன்று  பிரான்ஸ், ஐக்கிய அரபு அமீரகம், பக்ரைன் ஆகிய நாடுகளுக்கு செல்கிறார்….

பிரான்ஸ் செல்லும் அவர் அந்நாட்டு அதிபர் மேக்ரானை சந்தித்து பேச உள்ளார். அங்கிருந்து, வரும் 23, 24 ஆகிய இரண்டு நாட்கள் அமீரகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். பின்னர் அபுதாபியில் மன்னர் மற்றும் பட்டத்து இளவரசர் ஆகியோரை சந்தித்து பேசுகிறார். அமீரக அரசால் கடந்த ஏப்ரல் மாதம் அறிவிக்கப்பட்ட அந்நாட்டின் உயரிய விருது, பிரதமர் மோடிக்கு வழங்கப்படுகிறது. பின்னர் 24ம் தேதி பக்ரைன் செல்லும் அவர், 25ம் தேதி மீண்டும் பிரான்ஸ் திரும்புகிறார். அங்கு பியாரிட்ஸ் நகரில் நடக்கும் ஜி7 நாடுகளின் மாநாட்டில் நட்பு நாடு என்ற அடிப்படையில் இந்தியா சார்பில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.

Exit mobile version