புதிய நாடாளுமன்றக் கட்டடத்திற்கு பிரதமர் மோடி இன்று அடிக்கல்

டெல்லியில் புதிய நாடாளுமன்ற கட்டடத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று அடிக்கல் நாட்டுகிறார்.

புதிய நாடாளுமன்ற கட்டடம் 971 கோடி ரூபாய் செலவில், சுமார் 64 ஆயிரத்து 500 சதுர மீட்டர் பரப்பளவில் கட்டப்படுகிறது. கட்டப்படுகிறது. இரண்டு ஆண்டுகளில் இதன் கட்டுமான பணிகள் நிறைவடைந்து, 2022 ஆம் ஆண்டு திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், பிரதமர் மோடி புதிய நாடாளுமன்ற கட்டடத்துக்கு இன்று அடிக்கல் நாட்டுவதுடன், அதற்கான பூமி பூஜையையும் நடத்தி வைக்கிறார். இந்நிகழ்ச்சியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி வாயிலாக பங்கேற்கிறார். இதேபோல், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், வெளிநாட்டு தூதர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொள்ள உள்ளனர்.

Exit mobile version