பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டம் டெல்லியில் இன்று நடைபெறுகிறது.
மத்திய அமைச்சர்கள் பங்குபெறும் அமைச்சரவை கூட்டமானது, பிரதமர் மோடியின் இல்லத்தில் நடைபெறுகிறது. பிரதமர் தலைமையில் நடக்கும் இந்த கூட்டத்தில், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்க மாட்டார் எனக் கூறப்பட்டுள்ளது. நாட்டின் பொருளாதார வளர்ச்சி, சீன அதிபரின் வருகை, பல்வேறு துறைகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் மேம்பாட்டு பணிகள் குறித்து இந்த அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.