தனது அழைப்பை ஏற்று இந்தியா வந்த அமெரிக்க அதிபர் டெனால்ட் டிரம்புக்கு பிரதமர் நரேந்திர மோடி நன்றி தெரிவித்துக் கொண்டார்.
டெல்லயில் உள்ள ஐதராபாத் இல்லத்தில் பிரதமர் நரேந்திர மோடியுடன் அமெரிக்க அதிபர் டெனால்ட் டிரம்ப் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது பேசிய பிரதமர் மோடி, தனது அழைப்பு ஏற்று இந்தியா வந்தமைக்காக அமெரிக்க அதிபர் டிரம்புக்கு நன்றி தெரிவித்து கொள்வதாக குறிப்பிட்டார்.
பின்னர் பேசிய அதிபர் டெனால்ட் டிரம்ப், ஆயிரக்கணக்காக மக்கள் ஒன்று கூடி நின்று தன்னை வரவேற்றது தனக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவமாக கருதுவதாக தெரிவித்தார். இந்திய பயணம் மிகச் சிறப்பான அனுபவமாக உள்ளதாகவும் அதிபர் டிரம்ப் கூறினார்.