அரசு முறைப் பயணமாக இந்தியா வந்துள்ள, இலங்கை அதிபர் கோத்தபயா ராஜபக்ச இன்று பிரதமர் மோடியை சந்தித்து ஆலோசனை நடத்துகிறார்.
2 நாள் அரசு முறைப் பயணமாக இந்தியா வந்துள்ள இலங்கை அதிபர் கோத்தபயா ராஜபக்சே இன்று பிரதமர் மோடியை சந்தித்து பேசுகிறார். இந்த சந்திப்பின் போது இலங்கையிலுள்ள தமிழர்கள் நலன் மற்றும் தமிழக மீனவர்களின் பிரச்சனைகள் குறித்து இருநாட்டு தலைவர்களும் ஆலோசனை நடத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்திய பெருங்கடல் பகுதியில் சீனாவின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்த, இணைந்து செயலாற்றுவது குறித்து இருநாட்டு தலைவர்களும் ஆலோசனையில் ஈடுபடுவார்கள் எனத் தெரிகிறது. இலங்கையின் புதிய அதிபராக பொறுப்பேற்றுள்ள கோத்தபயா ராஜபக்ச, முதல் வெளிநாட்டு அரசு முறைப் பயணமாக இந்தியா வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.