வெள்ளம் பாதித்த பகுதிகளை ஹெலிக்காப்டர் மூலம் பிரதமர் மோடி ஆய்வு

கேரளாவில் வெள்ளம் பாதித்த இடங்களை பிரதமர் மோடி ஹெலிக்காப்டர் மூலம் பார்வையிட்டு ஆய்வு செய்தார். கேரள ஆளுநர் சதாசிவம், முதலமைச்சர் பினராயி விஜயன் ஆகியோரும் உடன் சென்று சேத விவரங்களை விளக்கினர். இதனைத் தொடர்ந்து வெள்ளத்தால் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு 2 லட்சம் ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாயும் மத்திய அரசின் சார்பில் நிவாரணம் வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

முன்னதாக முதலமைச்சர் பினராயி விஜயன், மற்றும் மூத்த அமைச்சர்கள், அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். இதனைத் தொடர்ந்து கேரளாவிற்கு கூடுதலாக 500 கோடி ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். எனினும் மத்திய அரசின் நிவாரணத் தொகை மிகக் குறைந்த அளவில் உள்ளதாக கேரள அரசியல் கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.

2ஆயிரம் கோடி ரூபாய் நிவாரணமாக வழங்கு வேண்டுமென்று கோரிக்கை விடுத்தநிலையில், மத்திய அரசு 500 கோடி ரூபாய் மட்டுமே அறிவித்துள்ளதாக முதலமைச்சர் பினராயி விஜயன் வருத்தம் தெரிவித்துள்ளார்.

 

Exit mobile version