பிரதமர் மோடி- அதிபர் ஜி ஜின்பிங் சந்திப்பு: மாமல்லபுரத்தில் 2வது முறையாக ஆய்வு

பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் மாமல்லபுரத்தில் சந்திக்கவுள்ள நிலையில் பாதுகாப்பு ஏற்பாடுகளை 2 வது முறையாக தலைமைச் செயலர் சண்முகம், டிஜிபி திரிபாதி ஆகியோர் ஆய்வு செய்தனர்.

மாமல்லபுரத்திற்கு அக்டோபர் 11ம் தேதி வருகை தரும் இந்த தலைவர்கள் இரண்டு நாட்கள் தங்கி இருந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கின்றனர். அப்போது இரு நாடுகளுக்கும் இடையே பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகவுள்ளன. இந்நிலையில் மாமல்லபுரத்தில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை தலைமைச் செயலர் சண்முகம் இரண்டாவது முறையாக ஆய்வு செய்தார். அர்ஜுனன் தபசு, வெண்ணை திரட்டி கல், ஐந்து ரதம், கடற்கரை உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார். இதேபோல் டிஜிபி திரிபாதி தலைமையில் மற்றொரு குழுவினரும் பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்தனர். இந்நிலையில் மாமல்லபுரம் பகுதி முழுவதும் காவல்துறை கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது. நகரை புனரமைக்கும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

Exit mobile version