மாமல்லபுரம் கடலின் அழகை வர்ணித்து டுவிட்டரில் கவிதை வெளியிட்ட பிரதமர் மோடி

பிரதமர் நரேந்திர மோடி கோவளம் கடற்கரையில் நடைப் பயிற்சியின்போது கடலின் அழகை வர்ணித்து எழுதிய கவிதையின் தமிழ் மொழியாக்கத்தை டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

சீன அதிபர் ஷி ஜின்பிங்கின் மாமல்லபுரம் வருகையின்போது பிரதமர் நரேந்திர மோடி கோவளத்தில் உள்ள விடுதியில் 2 நாட்கள் தங்கினார். அக்டோபர் 12ஆம் தேதி காலையில் கடற்கரையில் நடைப்பயிற்சி மேற்கொண்ட மோடி, பாறையில் அமர்ந்து கடலின் எழிலையும் பார்வையிட்டார். அப்போது கடலின் அழகையும் பெருமையையும் வர்ணித்து மோடி எழுதிய கவிதையின் தமிழ் மொழியாக்கத்தைத் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அலைகடலே, அடியேனின் வணக்கம் எனத் தொடங்கும் அந்தக் கவிதையில் கடலின் சீற்றம், அமைதி, ஆழம், பெருமை ஆகியவற்றைக் குறிப்பிட்டுள்ளார். எல்லையில்லாத ஆற்றல் இருந்தாலும் கரையைக் கடக்காமல் கண்ணியம் இழக்காமல் பணிவின் பெருமையைக் கடல் உணர்த்துவதாகவும் அந்தக் கவிதையில் குறிப்பிட்டுள்ளார்.

 

Exit mobile version