பிரதமர் மோடியும், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானும் சந்தித்து பேசமாட்டார்கள் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
வரும் 13,14-ம் தேதிகளில், கிர்கிஸ்தான் தலைநகர் பிஷ்கெக்கில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாடு நடைபெறுகிறது. இதில் இந்தியாவும், பாகிஸ்தானும் உறுப்பினர்களாக உள்ளன. இதில், இந்திய பிரதமர் மோடியும், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானும் கலந்துகொள்ள இருக்கின்றனர். இந்நிலையில், இருவரும் சந்திக்க இருப்பதாக தகவல் வெளியானது. ஆனால், இத்தகவலை வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார் மறுத்துள்ளார். ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில், பிரதமர் மோடியும், பாகிஸ்தான் பிரதமர் இம்ரானுகானும் சந்தித்து பேச உள்ளதாக வெளியான தகவல், உண்மைக்கு மாறானது என அவர் உறுதிபட தெரிவித்துள்ளார். புல்வாமா தாக்குதலுக்குப் பின், 2-வது முறை பிரதமராக பதவியேற்ற பிரதமர் மோடி, பாகிஸ்தானுடன் பேச விரும்பவில்லை என கூறப்படுகிறது.